உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

889 சைசாம் ஃபானை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று "அதிகாரி அந்த இளைய பெண்ணை விரும்பு கிருர், நாம் இணங்குவது நல்லது. அந்தப் பெண்ணை இசையச் செய்யும்படி உங்கள் சிநேகிதியிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்று தாழ்குரலில் கூறினன். இதற்குள் செய்தியின் உட்பொருளும் தாங்கள் தப்பிக்க கொடுத்தாகவேண்டிய விலையும் என்ன வென்பது அவர்களுக்கு தெளிவாகிவிட்டது. நான் மாட்டேன்!....நான் மாட்டேன்!” என்று ஈஸா கதறி அழுதாள். அது சமயம் லெய்வா அவளிடம் ஏதோ பேச முயன்ருள். தலையைக் கவிழ்த்துக்கொண்டு கைகள் மேஜை யில் வெளியே நீண்டு கிடக்க, முஷ்டிகளை மூடியவாறு தலைமயிர் கலைந்து தோள்கள்மீது புரள ஈஸ்" சாய்ந்து கிடந்தாள். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளாமல் சிறுவன் ஸ்ப்ரெளட் அழத் தொடங்கிவிட்டான். ஈஸா விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். - திடீரென்று லெய்வா எழுந்து நின்ருள். ஃபான் மீது அலட்சியப் பார்வை ஒன்றை வீசிவிட்டு, ஆபாச மான முறையில் சபதம் கூறி 'அவ்வாறே நடக்கட் டும்!....நான் போகிறேன்!....அந்த மிருகத்துக்கு அது விரும்பும் இரையைக் கொடுங்கள்!” என்று சொன் ள்ை. இதைக் கூறிவிட்டு மற்றவர்களை ஏரெடுத்துப் பார்க்காமல், அவள் தலை நிமிர்ந்து நடந்து சென்று மாடிப்படிக்கட்டில் ஏறினள். மேலே சென்று ஒரு வினடி நின்றுவிட்டு, பிறகு அறைக்குள்ளே சென்ருள், 25 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/389&oldid=752975" இலிருந்து மீள்விக்கப்பட்டது