உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388


அலட்சியமாகப் பார்த்தான்; வழிகாட்டியின் செவி களில் ரகசியமாக ஏதோ ஒதினன். "நான் முயன்று பார்க்கிறேன். அவள் அதற்கு இணங்குவாளா என்று எனக்குத் தெரியவில்லை!" 'அவர்கள் எல்லையைக் கடந்து தப்பிக்க வேண்டு மென்று விரும்பினால், ன்வள் கட்டாயம்........ இணங்கு வாள்!....புரிகிறதா?” சைசாம் கீழே இறங்கி வந்து, குழுவினரை ஒரு பக்கமாக வருமாறு ஜாடை காட்டினன். “எவ்வளவு பணம்?” என்று ஃபான் கேட்டான். சைசாம் ஜந்து விரல்களை நீட்டிக் காட்டினன்; டுவானிடம் ஏதோ முணுமுணுத்தான். தலையைக் குனிந்தபடி, "நான் வ ரு ந் து கி றே ன். அவன் இப்போது உங்கள் புதல்வியைப் பார்த்திருக்கிருன்; இது விஷயமாக நீங்கள் ஜாக்கிரதையாக யோசனை செய்துபார்க்க வேண்டும்; அதுதான் எனக்கு அச்ச மாக இருக்கிறது!’ என்ருன். அன்று டுவானின் கண்கள் கோபத்தால் கனலைக் கக்கியதை அதற்குமுன் அவர்கள் ஒருபோதும் கண்ட தில்லை. பெண்கள் வந்து பயந்து அமர்ந்தனர். 'அறிவுகெட்ட மிருகம்!....நீ அந்தக் காரியம் செய்யவேமாட்டாய் என்று நான் அறிவேன்; நானும் அதை அனுமதிக்கவே மாட்டேன்!” என்று டுவான் தன் மகளிடம் கூறினன். 'எதை நான் செய்ய மாட்டேன்?' என்று திகைப்புடன் வினவிஞள் ஈஸ்" பெருமூச்சுகளுக்கிடையே அங்கு ஒரு கணம் பயங்கர மெளனம் நிலவியது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/388&oldid=1275053" இலிருந்து மீள்விக்கப்பட்டது