உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38? “லாவோ வூ இவர்கள் நல்ல மனிதர்கள். நீங்கள் அவர்களை தப்பிச்செல்ல அனுமதித்தால், உங்களுக்கு நான் இருநூறு கொடுக்க முடியும்.” "ஒரு நிமிஷம் பொறுங்கள். முழு உண்மையை யும் நீங்கள் என்னிடம் சொல்லவில்லையே! சென்ற இரவு எட்டு அல்லது ஒன்பது பேர் இங்கு வந்து சேர்ந்ததாக நான் அறிந்தேன். அப்படியென்ருல், தொள்ளாயிரம் ஆகிறது! உங்கள்பாடு பரவா - "லாவே ஆ. முன்பெல்லாம் நீங்கள் எனக்குப் பல சாதகங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் யோக்கியமாகவே இருப்பேன். அவர்கள் நல்ல மனி தர்கள். கீழேயுள்ள பெரிய மனிதர் என்னுடைய பழைய நாள் சிநேகிதர். அவர்கள் எல்லோரையும் எல்லையைத் தாண்டி ஹாங்காங் போக அனுமதிக்க இயலுமா உங்களால்? அவ்விஷயத்தில் எனக்குக் கஷ்டம் உண்டாக்கிவிடாதீர்கள்” என்று முதலில் மூன்று விரல்களையும், பிறகு நான்கு விரல்களையும் இறுதியாக ஐந்து விரல்களையும் உயர்த்திக் காட்டி ன்ை. சார்ஜண்ட் சம்மதித்துத் தலையை அசைத்தான்; சைசாம் இளநகை பூத்தான். "ஒரு நிமிஷம் தாமதியுங்கள். அவர்களிடம் பணத்தைப்பற்றி யாதொன்றும் சொல்லவேண் டாம்.” - - வேருெரு மெத்தையில் ஈஸ் விட்டுச் சென் றிருந்த அவளது போர்வையைச் சுட்டினன் அவன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/387&oldid=752973" இலிருந்து மீள்விக்கப்பட்டது