உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394


வத்தை என் வாழ்நாளில் நான் ஒருபோதும் கண்ட தில்லை; உங்களுக்காக என் மனம் துடிதுடித்தது. இன்னுெரு நல்ல குடும்பத்துப் பெண்மணி என்னை வியப்பில் ஆழ்த்தினள். அவள் உங்களைக் காப்பாற்றி ள்ை; நம்மை எல்லோரையுமே காப்பாற்றி விட்டாள்.' அந்நிகழ்ச்சியின் காரணமாக ஸ்வாட் அப்போ தும் பரபரப்புடன்தான் இருந்தாள் என்பதை அவளது குரல் காட்டியது. "அவள் அப்படி அல்ல!” ஸ்வாட் குறிப்பிட்ட வியுஜி - நல்ல குடும்பத்துப் பெண்’ என்னும் பதத்தை ஈஸ் மனத்தில் கருதியே இதைக் கூறினுள். ஆனல் அவளால் வார்த்தையைப் பூர்த்தி செய்ய முடியாமல் பாதியில் நிறுத்திக்கொண்டாள். "ஃபானும் லெய்வாவும் கல்யாணம் செய்து கொண்டுவிட்டார்களா? சொல்லுங்கள்." 'இல்லை.” 'நான் அப்படிக் கருதவில்லை. அவர்கள் ஒருவருக் கொருவர் ரொம்பவும் அன்பாக இருக்கிருர்கள்.” விருந்தினர்கள் எல்லோரும் கீழ்த்தளத்திற்கு வந்துவிட்டார்களா என்று காண அவர்கள் திரும்பி வந்தார்கள். சத்திரத்துப் பொறுப்பாளனின் மனைவி காலைச் சிற்றுண்டிக்கு மேஜை போட்டுக்கொண்டிருந்தாள். லெய்வாமீது கடைக்கண் பார்வையை வீசினுள் அவள்; லெய்வா இயல்பாகத் தோன்றவேண்டுமென விழைந்தாள். ஆனல் அவளால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்று கண்டுகொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/394&oldid=1275055" இலிருந்து மீள்விக்கப்பட்டது