உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396


டாம். வருந்துதற்குரிய விஷயம் அது. ஆனல் அது முடிந்துவிட்டது. பத்திரமான பிரயாணத்திற்கு நமக்கு உறுதியளித்திருக்கிருன் சார்ஜன்ட். நாம் காவல் நிலையத்துக்கு வரும்பொழுதுதானே அந்தச் சீட்டைக் கொடுப்பதாக அவன் சொல்லி இருக் கிருன்?" சமையலறையிலிருந்து சைசாம் உள்ளே நுழைந் தான். "நெடுஞ்சாலையைக் கடந்து மறு பகுதியை அடைய, நமக்குப் பாதுகாப்பிற்கு இரண்டு படை வீரர்களையும் அனுப்புவதாக அவன் என்னிடம் வாக்களித்துள்ளான்!” "நாம் எதிர்பார்த்ததைவிட அது பெரிய காரியம்தான்” என்ருன் ஃபான். காலைச் சிற்றுண்டி முடிந்ததும், விரைவாக அவர்கள் பிலிங்சூனை விட்டுப் புறப்பட்டு ஒரு மைல் நடந்தார்கள். இடதுபுறம் மேட்டுப்பாங்கான கரைகளின் மத்தியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த நீர்த் தேக்கத்தை அவர்கள் பார்த்தார்கள். அதற்கு நேர் எதிரே மேகங்கள் மூடியிருந்த வானத்தின் பின்னணி யில் அமைதியாகவும் கம்பீரமாகவும் விளங்கியது கோலநட் சிகரம். அவர்கள் நின்ற இடத்திலிருந்து கீழே நீர்ப் படுகைக்கு உள்ள தூரம் ஒரே ஒரு மைல்தான். அங்கு நெல்வயல்களும், சிறிய பண்ணை வீடுகள் சிலவும் இருந்தன. அவை உப்பளக் குகைக்குகொண்டுவிட்டன; அக்குகை கடலருகில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/396&oldid=1275056" இலிருந்து மீள்விக்கப்பட்டது