உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397


லெய்வா காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தாள். சைசாமும் அவர்களுக்குப் பாதுகாப் பளிக்க சாம்பல்நிற உடை அணிந்த இரு இளைஞர் களும் அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் கையை ஆட்டிவிட்டு வெற்றி பெருமிதத்துடன் நடந்தாள். 'அவர்கள் இங்கே இருக்கிரு.ர்கள். துப்பாக்கி யால்கூட செய்ய முடியாத ஒரு காரியம்...." அவள் பூரிப்பால் கூறினள். நீர்ப்படுகையின் அமைதி தேங்கும் இயற்கைக் காட்சியும் கோலநட்டின் கம்பீரமான குவிந்த சிகரமும் அந்த மங்கிய பொழுதில் மனதை வசீகரித் துக்கொண்டிருந்தன. ச க தி க் குட்டைகளையும் முன்னுல் நீட்டிக்கொண்டிருந்த பாறைகளையும் சுற்றி அவர்கள் வெகு சுறுசுறுப்பாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மேல்மட்டத்திலிருந்த வயல் களுக்கு நடுவில் குறுகிய பாதைகளில் ஒருசணம் அந்த மெளன ஊர்வலம் சென்றது. கடந்த இரவு பெய்த மழையில்ை அவ்வயல்களில் நிரம்பிய நீர் ஒடையாகி ஒன்றிலிருந்து மற்ருென்றுக்கு மாறிமாறி பாய்ந்தன; சில வேளைகளிலே அவர்களுக்கு முன்னே யிருந்த பாதைகளின்மீது தண்ணிர் மிதமிஞ்சி வழிந்து கொண்டிருந்தது. கடைசியாகக் கடக்கவேண்டிய கால்மைல் துரத்தில், மிகமிகக் குறுகிய திருப்பங்கள் பல இருந்தன. குறுகிய உலர்ந்த தடத்தின்மீது தன் தந்தையை எச்சரிக்கையுடன் வழிநடத்திச் சென்ருள் ஈஸா. சிறுவன் ஸ்ப்ரெளட்டோடு நடந்துகொண் டிருந்தாள் ஸ்வாட்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/397&oldid=1275057" இலிருந்து மீள்விக்கப்பட்டது