உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$98 "அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்' என்று கூச்சலிட்டான் தாத்தா. அதேகணத்தில் டுவான் வழுக்கி ஒரு குட்டையில் மல்லாந்து விழுந்துவிட்டான். இதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் சங்கிலி கோர்வைபோல் நிகழ்ந்தன. சிறுவன் ஸ்ப்ரெளட், ஸ்வாட்டின் இறுக்கமான பிடியினின்றும் நழுவி வேகமாகச் சுழன்று, செங் குத்துப் பாறைமீது விழுந்தான். "ஐயையோ!' என்று அவனைத் தொடர்ந்து குதித்தவண்ணம் அலறிஞள் ஸ்வாட். ஸ்ப்ரெளட் தவறி விழுந்துவிட்டானே!” என்று ஒலமிட்டாள் ஈஸ்". அவ்விரு உடல்களும் செங்குத்துச் சரிவுக்குக் கீழே ஒருவர்மீது ஒருவராக உருண்டுகொண்டிருந் ததை அச்சமும் பீதியும் கொண்டு அவர்கள் பார்த் தார்கள். சிறுவன ஸ்வாட் திறமையுடன் வெடுக் கெனப் பற்றிப் பிடித்துக்கொண்டாள். அவள் முழு முயற்சியுடன் அவனைத் தன்னுடன் கெட்டியாக அனைத்துக்கொண்டபடி, மாக்கல் சரிவிலிருந்து உருண்டு விழுந்துகொண்டிருந்தாள்! பாதையை அனுசரித்து மற்றவர்கள் வெகு வேகமாக ஓடினர்கள். ஃபானும் வழிகாட்டியும் முன்னேயும், காவலர்கள் அடுத்தும் ஓடினர்கள். ஸ்வாட்டும் சிறுவனும் வழுக்கிவிழுந்த இடத்தை அடைந்ததும், நேர்கீழாகச் சரிந்திருந்த பாறை மண்டிய மேற்பரப்பையும், அடியில் தண்ணிர் பாதி யளவு மூழ்கிய நெல்வயலில் ஒரு ஸ்திரீ உருண்டு கிடந்ததைவும், அவள் அருகே அச்சிறுவன் எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/398&oldid=752985" இலிருந்து மீள்விக்கப்பட்டது