பக்கம்:இலட்சிய பூமி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405


ஒரு செங்குத்துப் பாறைக்கு முப்பதடி தூரத்தில் வந்துவிட்டான். ஒரு சிற்றறு அதன் பக்கமாக ஒடியது; குகைமாதிரி தோன்றிய ஒர் இருண்ட ஒட்டு நிலத்தின் நுழைவாயில் மீது அதன் தண்ணிர் சொட்டுச் சொட்டாக வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு சிறிய பிராணி வேகமாக உள்ளே பாய்ந் தோடியதால், அதன் நிழல் அவனுடைய கணுக்கால் மீது படர்ந்து மறைந்தது, அவன் ஜாக்கிரதையாக முன்னேறிஞன், இருண்ட உட்பகுதியில் விஸ்தார மானதொரு நிலப்பரப்பைக் கண்டுபிடித்தான். அந்த இடம் மரங்களடர்ந்து சதசதப்பாக இருண்டு பயங்கரமாக இருந்தது. கண்ணுடிப் பளிங்கு போன்ற இரண்டு கண்கள் ஒரு முடுக்கிலிருந்து அவனே வரவேற்றன. ஃபான் டேக் கென்று நின்றன். கண்கள் அசைந்தன. ஆனல், அங்கே சந்தடியற்ற பயங்கரமான அமைதி நிலவியது. 'யார் அங்கே?' என்று கேட்டான் ஃபான். அவன் முன்னேறிச் சென்றபோது, அவனை வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தன. அக்கண்கள்; அவன் குகையை நெருங்கியதும் அங்கே உட்கார்ந் திருந்த ஒரு பையனின் உருவம் மாசுபடர்ந்தாற் போல் அவன் கண்களுக்குத் தெரிந்தது. 'யார்?' என்று அவன் வினவினன். அந்தப் பையன் நடுங்கிக்கொண்டே தன் கால் களை இழுத்துக் கொண்டான். - அருகே நின்று பார்க்கலாம்ென்று ஃபான் சற்று நகர்ந்தான். பையன் முற்றிலும் பயந்துபோனன். அச்சத்தால் கைகளை உயர்த்தினன். 26 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/405&oldid=1275061" இலிருந்து மீள்விக்கப்பட்டது