பக்கம்:இலட்சிய பூமி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406


'பயப்படாதே. நான் ரோந்துக்காரன் அல்ல!” பிதியால் கலங்கிய மெலிந்த முகமொன்றை அந்தக் குறை இருட்டில் பார்த்துப் புரிந்துகொள் ளும்படியாகவே இருந்தது. “தாங்கள் என்னைக் கைது செய்யப்போவ தில்லையே?’ மெல்லிய நடுங்கும் குரலில் இவ்வார்த் தைகள் வெளிவந்தன. 'இல்லை. நானும் உன்போல் ஒரு அகதிதான்!...” 'சற்று நேரத்துக்கு முன்பு வெளியே குரல் கேட்டனவே!-அவை காவல் படையினருடையவை இல்லையா?” 'இல்லை. அவர்கள் என் சிநேகிதர்கள்; எங்க ளுடன் ஒரு சிறுவனும் சில பெண்களும் இருக் கின்றனர்.” - 'உங்களிடம் சாப்பிட ஏதாகிலும் இருக் கிறதா?” அவனுடைய நம்பிக்கையைப் பெறும் பாவனை யில் ஃபான் குனிந்து அவனுடன் அமர்ந்தான். 'ஜாக்கிரதை. முள்ளம் பன்றிகளின் மீது உட் காராதே! அவைகளின் முட்கள் மிகக் கூர்மை யானவை, குத்திவிடும்!” என்று கூறி ஃபான் எழுந்து நகர்ந்து நின்ருன். மனிதர்களின் அரவத்தால் பீதியடைந்த அந்தச் சின்னஞ் சிறிய கரிய உருவங்கள் மெள்ள நகர்ந்து செல்வதை அவன் கண்டான். 'நீ எப்படி இங்கே வந்தாய் அதைச் சொல்.” "நான் என்னுடைய பெற்ருேர்களை இழந்து விட்டேன். மூன்று தினங்களாக நான் சாப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/406&oldid=1275062" இலிருந்து மீள்விக்கப்பட்டது