பக்கம்:இலட்சிய பூமி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40? வில்லை. அன்புமிக்க சிற்றப்பா எனக்குச் சாப்பிட நீங்கள் ஏதாவது தர இயலுமா?” 'சாப்பிடுவதற்கு எங்களிடம் ஏதாவது இருக்கும் உன்னுல் நடந்துவர முடியுமா?” மெதுவாக அவனை எழுந்து நிற்கச்செய்ய உதவின்ை ஃபான். குகையின் நுழைவாசலை அவர்கள் அடைந்தபோது நீள்வட்டமான அந்தச் சிறுவன் முகத்தில் திகைப்பும் பயமும் குடிகொண் டிருப்பதை அவன் கண்டான். அவன் வெறுங் காலோடு இருந்தான். அவனது முழங்கால்களில் உள்ள சிகப்புத் தழும்புகள் அவன் அணிந்திருந்த அரைக்காற்சட்டைக்கு வெளியே நன்கு தெரிந்தன. அவனுக்குப் பத்துப் பனிரெண்டு வயது இருக்கும். ஃபான் அவனே பலதடவை இறுகப் பிடித்துக் கொள்ளவேண்டிய அளவுக்கு அவன் பலவீனமாக இருந்தான். அவ்னது இடுப்பைச் சுற்றி ஒரு கையைப் போட்டு அணைத்துக்கொண்டு மற்ருெரு கையை அக்குளுக்கு அடியில் வைத்துத் தூக்கி அவனைக் கடக்கச் செய்தான் ஃபான்; அதாவது, நீர்ப்பகுதியைத் தாண்டி அவனை மெய்யாகவே புதர்வழிகளினூடே தூக்கிக்கொண்டு போன்ை ஃபான். ஃபான் விறகு தேட வந்ததை மறந்தேவிட் டான். நோயாளிப் பையன் ஒருவனுடன் அவன் திரும்பிவந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது, மற்றவர்கள் பெரிதும் ஆச்சரியமடைந்தார்கள். பையனின் சட்டை கிழிந்திருந்தது; முகத்தில் சேறு அப்பிக்கொண்டிருந்தது; கண்களைத் திறந்து பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/407&oldid=752996" இலிருந்து மீள்விக்கப்பட்டது