உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410


'சவப்பெட்டிகளுக்கு அடியில் பெஞ்சுப்பலகை கள் இருக்கின்றனவென்று நான் கருதுகிறேன். அந்தப் பிணங்களில் ஒன்றை நாம் நகர்த்தினல், மடிந்தவர்களை நாம் தொந்தரவு செய்ததாக ஆகு மென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” - 'அப்படித்தான் நாங்கள் நினைப்போம்” என்று பயப்படுத்தும் விதத்தில் சொன்னன் ஃபான். ஜேம்ஸ் கோஷ்டினர் இன்னமும் வரவில்லையே. என்பதுபற்றி ஃபான் கவலையடைந்தான். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் யாதொரு கஷ்டமும் இருக்காதென்றே அவன் நம்பினன். ஈஸ் அளித் திருந்த கோட்டுடன் டுவான் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான். ஸ்வாட்டும் ஸ்ப்ரெளட்டும் தங்களுடைய ஈரத் துணிமணிகளோடு குளிரை தைரியமாக எதிர்த்து நின்றுகொண்டிருந்தார்கள். 'நீ என்ளுேடு வந்து அந்தக் குகைகளை எனக்குக் சுாண்பிக்க இயலுமா?" க்வென் மகிழ்ச்சியுடன் எழுந்தான். நடந்து செல்லும் வழக்கம் இல்லாதவன்போன்று அவன் நகர்ந்தான். பிறகு மெள்ள நடக்க முயன்ருன். அவனது காலடிகள் தாளப்பிரமாணத்தோடு விழுந் தன. தன்னைக் கவனித்துக்கொண்டிருந்த அக்குழு வினரை அவன் திரும்பிப் பார்த்தபொழுது, அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்து விளையாடியது. 'உன் பெற்றேர்கள் இறந்துவிட்டதாகவே நீ நினைக்கிருயா?” sia "நிச்சயமாக இறந்துவிட்டார்கள். செங்குத்துப் பாறையிலிருந்துஅவர்கள் விழுந்துகொண்டிருந்ததை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/410&oldid=1275063" இலிருந்து மீள்விக்கப்பட்டது