உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

469 யங்களைப் பொறுக்கக் குனிந்தான். பிறகு நீர்க்காலில் நீரருந்தி, முகத்தை அலம்பிக்கொண்டபோது அவ னுக்கு தெம்பும் மைேதிடமும் உயிர்த்தெழுந்தது: அப்போதுதான் தன்னைச் சுற்றிலும் நோக்க ஆரம் பித்தான் அவன். 'உன் பெயர் என்ன?” "க்வென் என்று அழைப்பார்கள்!” குழுவினர் அப்போதும் காய்ந்த விறகு வேண்டு மென்று தேடிக்கொண்டிருந்தனர். ஜ்வாலை விட் டெரியும் நெருப்பு, கொஞ்சம் கொதிதண்ணிர், கொஞ்சம் உணவு ஆகியவையே இப்போது அவர் களது மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. அங்கே அநேக குகைகள் இருப்பதாகவும், அங்கு சருகுகளும் கள்ளிகளும் கிடைக்குமென்றும் பையன் கூறினன். அந்த இடத்திற்கு யென்டீன்டங் என்று பெயர் என்பதை ஃபான் நினைவுபடுத்திக் கொண் டான். 'இங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு குகையிலே ஆறு அல்லது ஏழு சவப்பெட்டிகளே வரிசையாகக் கண்டேன். அது அதிக தூரமில்லை. அருகேதான்!” "ஐயோ, சொல்லாதீர்கள், வேண்டாம்!” என்று ஈஸாவும் லெய்வாவும் ஏககாலத்தில் பயத்தால் கதறினர்கள். ஃபான் புன்சிரிப்புச் சிரித்தான். சிறுவன் க்வென்னின் முகம் உண்மையிலேயே அழகாக இருந்தது. அவனது தாடை வட்டவடிவ மாக இருந்தது. அவன் கண்கள் இரண்டும் இருண்ட நீர்க் குட்டைகளைப்போல் ஜ்வலித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/409&oldid=752998" இலிருந்து மீள்விக்கப்பட்டது