உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412


"ஊஹஅம். அவை எனக்கு நல்ல் துணையாக இருந்தன. தங்களைக் கதகதப்பாக வைத்துக் கொள்ளுவதற்காகத்தான் அவை நெருக்கமாக அடைந்துகொள்கின்றன போலும் அவை பிரிந்து, பிறகு மெல்லிய சத்தம் செய்துகொண்டு மீண்டும் ஒன்ருகக்கூடி அடைந்துகொள்கின்றன. அவை என் னைப்பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை; நானும் அவைகளைப்பற்றிக் கவலைப்படவில் ை!” - சவப்பெட்டிகள் இருந்த குகைக்கு அவர்கள் வந்தார்கள். க்வென் சொல்லியிருந்த மாதிரியே, அங்கே ஏழு பிணப்பெட்டிகள் ஒரு வரிசையில் இருந்தன. அவை அங்கே பல வருஷங்களாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் சொந்தக்காரர்கள் பிணத்தைத் தங்கள் சொந்தக் கிராமத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது வழக்க மாக இருந்ததால் அவை அங்கேயே வருஷக்கணக்கில் இருந்தன. நம்பிக்கை குலைந்து எதற்கும் துணிந்த ஒருவ னுக்கு மற்றவன் என்ன செய்ய முடியுமென்பது பற்றி யாதொரு அறிவுரையும் இல்லை. ஃபான் வெறுங்கையுடன் திரும்ப விரும்பவில்லை. டுவானே அல்லது சிறுவன் ஸ்ப்ரெளட்டோ நோய்வாய்ப்பட நேரிட்டால், அப்பால் அவர்களின் பாதுகாப்பு ஆபத் திற்குள்ளாகிவிடும்! அவன் மனம் விஞ்ஞான ரீதியான நுட்பத்துடன் இயங்கியது. ஆற்றின் மறு கரைக்குச் செல்ல முயலும்போது காய்ச்சல் கண் டிருக்கும் வயோதிகன்ை. தூக்கிச் செல்ல இந்தச் சவப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/412&oldid=1275065" இலிருந்து மீள்விக்கப்பட்டது