உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413


பெட்டிகள் பயன்படும். ஆகவே அவைகளை எடுத்துச் செல்வதைப்பற்றி அவன் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தான். - - ஃபான் அமைதியாக நிற்பதைக் கண்டு, "அதெல் லாம் சரியாகவே இருக்கின்றன. நல்ல மனிதர்கள். படைவீரன் ஒருவன் என்னைத் துரத்திக்கொண்டு வருவதாக எனக்குத் தோன்றியபோது, அந்தச் சவப் பெட்டி ஒன்றினடியில் நான் ஒளிந்துகொண்டேன்' என்ருன் க்வென். 'நீ இங்கேயே இரவு பூராவும் துரங்கியைா?” 'இல்லை. அது அந்திக்கருக்கல் நேரம். இங்கே நான் அரைமணி நேரம் மறைந்திருந்தேன். அவன் போய்விட்ட பிறகு, மலைமீது மிகத் தொலைவுக்கு நான் ஒடினேன். இறந்தவர்கள் இதைப் பொருட் படுத்துவார்களென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” 'இல்லை, உண்மையில் நான் அப்படி நினைக்க வில்லை.” சவப்பெட்டிகள் கனமாகவும் பருத்த உடல் களைத் தாங்கிக்கொண்டும் இருந்தன. சில மலிவான "பைன் மரத்தாலும், மற்றவை கருங்காலி மரத் தாலும் செய்யப்பட்டிருந்தன. - சிறிதாக இருந்த ஒரு பெஞ்சுப் பலகை எடுப் பதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தனர். "ஒரு கைகொடு. பெஞ்சுப்பலகையை நீ வெளியே இழுக்க முயற்சி செய்! அதுவரை நான் அதைத் துரக்கிப் பிடிக்கிறேன்.” - - - 'நீங்கள் இறந்தவர்களிடமிருந்து பாவமன்னிப் புக் கோரப்போவதில்லையா?” க்வென் வினவினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/413&oldid=1275066" இலிருந்து மீள்விக்கப்பட்டது