உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 19 குழுவினர் ஒருவர்பின் ஒருவராக வந்து சேர்ந் தனர். காவலரிடம் சிக்காமலிருக்க, அவர்கள் இரவு பூராவும் சுமார் பத்துமைல் தூரம் நடந்தார்கள். நேர்வழி மூலம் அவ்விபத்துக்கு வந்து சேர அரை மணி நேரம்தான் பிடிக்கும். எல்லோரும் நிம்மதி யடைந்தார்கள். முக்கியமாக ஃபான் பெரு நிம்மதி யடைந்தான். சாங்ஃபூ தன் மனைவியோடும் மூன்று புதிய அகதிகளோடும் சுறுசுறுப்பாகப் பேசிக்கொண்டிருந் தான். அவர்களில் ஒருவன் சுங்ஷான் ராணுவ உடுப்புகளுடன் இருந்தான்; கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டிருந்தான்; அவனும் அவர்களோடு வந்திருந்தான். ஜேம்ஸ்தான் கடைசியாக வந்து சேர்ந்தவன். 'ஜேம்ஸ் ஜேம்ஸ்' ஈஸ அழைத்தாள். அவன் பாறைமேல் பத்தடி தூரத்தில் நின்று கொண்டிருந்தான்; கீழே வர இருந்தான். அவன். ஈஸஅ கைகளை நீட்டி அவனே வரவேற்க நின்ருள். “என் அன்பே நான் திரும்பி வந்துவிட்டேன்!” ஈல மகிழ்ச்சியில் திளைத்தாள் கால் இடறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/419&oldid=753009" இலிருந்து மீள்விக்கப்பட்டது