உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420


கீழே நீரோடையில் விழுந்து விட்டாள். அவளைப் பிடிக்க உடனே தண்ணிரில் பாய்ந்தான் ஜேம்ஸ் தண்ணிரில் பெருஞ் சத்தம் எழும்பியது. நீரோடை இங்கு குறுகலாக இருந்தது. ஈஸ்வின் மேற் சட்டை யிலும் முகத்திலும் தண்ணிர் வாரி அடித்தது. "என் அன்பே உனக்கு ஏதாவது அடிபட்டு விட்டதா?’ - 'இல்லை; உங்களுக்கு அடிபட்டு விட்டதோ?” அவர்கள் இருவரும் கலகலவென்று சிரித்தனர். அருகிருந்த ஸ்வாட்டும் சாங்ஃபூவும் காதலர்களின் விளையாட்டை மெளனமாகப் பார்த்து ரசித்தனர். கை கோர்த்தபடி, ஜேம்ஸும் ஈஸாவும் சென்ருர்கள். முகத்திரையில் தண்ணிருடன் கண்ணிரும் கலந் திருக்க ஈஸ் சிரித்துக் கொண்டிருந்தாள். ஜேம்ஸ் கால்களைப் பதித்து கோட்டிலிருந்த தண்ணிரை உதறினன். டுவான் மகிழ்ச்சியுடன் நோக்கினன். "நீங்கள் இருவருமே காலுறைகளைக் கழற்றி விடுவது நல்லது. அங்கே நெருப்பு நன்கு எரிந்து கொண்டிருக்கிறது.” அவர்கள் தீயை நெருங்கி உட்கார்ந்தார்கள். 'உங்களோடு வந்துள்ள அந்த ஆட்கள் யார்?” என்று ஈஸு வினவிளுள் "அவர்களும் நம்முடன் சேரப் போகிருர்கள். நான் உனக்கு அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன்." அவர்கள் தங்கள் பாதங்களை காய வைத்துக் கொண்டிருக்கையில், டுவான் தீயருகே வந்து, 'ஜேம்ஸ், சென்ற இரவு இங்கு ஒரு சம்பவம் நடந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/420&oldid=1275070" இலிருந்து மீள்விக்கப்பட்டது