பக்கம்:இலட்சிய பூமி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421


தது. அதுபற்றி லெய்வாவுக்கு நீங்கள் நன்றிசெலுத்த வேண்டு மென்று விரும்புகிறேன்” என்றுகூறினன். “எதற்காக?” 'அதிருக்கட்டும்; நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு இதய பூர்வமாக அவளுக்கு உங்கள் நன் றியைச் செலுத்துங்கள். நான் அதைப்பற்றி பிறகு விளக்குகிறேன்.” ஜேம்ஸ், ஈஸாவை நோக்கினன். அவள் நாணத் தால் முகம் சிவந்து, 'அப்பா சொல்வது சரி. நீங்கள் சென்று முதலில் அவளுக்கு நன்றி தெரிவியுங்கள்” என்று கூறினள். 'ஏன், நீ சொல்ல முடியாதா?” "அப்பா சொன்னபடி செய்யுங்கள்.” 'ஒருவருக்கு எதற்காக நன்றி செலுத்துகிருேம் என்று தெரியாமல், நன்றி தெரிவிப்பது முட்டாள் தனமில்லையா?” என்று ஜேம்ஸ் சொன்னன். 'மனத்தை அலட்டிக் கொள்ளாதீர்கள்........! ஆளுல் உங்கள் கைக் கடிகாரம் எங்கே?' என்று ஈஸா கேட்டாள். “அதில்தான் ஒரு கதை அடங்கியிருக்கிறது. நாங்கள் கடும் பட்டினி கிடந்து, இரவெல்லாம் நடந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாமல், பகல் பூராவும் தலை மறைவாயிருந்தோம்.” r லெய்வா அவர்களை நோக்கி முதுகைக் காட்டிய வண்ணம் ஃபானேடு பக்கமாக நின்றிருந்தாள். ஜேம்ஸ் தன்னுடைய பாதங்களே காலணிக்குள் நுழைத்துக் கொண்டு லெய்வாவை நோக்கிச் சென்ருன். அவளுக்குக் கை கொடுத்தான். 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/421&oldid=1275071" இலிருந்து மீள்விக்கப்பட்டது