உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 "க்வென், க்வென்!” எழுந்திரு; நாம் போக வேண்டும்” என்று கூப்பிட்டாள். சற்றுச் சிரமத்துடன் அவள் நிமிர்ந்து உட்கார்ந் தாள், பையனை தரையில் படுக்கவிட்டாள். 'டார்ச்சை அடியுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்ருள் லெய்வா. பிறகு அவள் க்வெனே எழுந்து உட்காரச் செய் தாள். தான் எங்கே இருக்கிருேம் என்பதை அறியா மல் அவன் இன்னமும் சனவுலகிலேயே இருந்தான். அப்போது ஃபானின் கண்டிப்பான குரல் அவன் காதில் விழுந்தது: "க்வென் எழுந்திரு. நாம் போய் மற்றவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்.” கண்களை கசக்கிக்கொண்டே க்வென் எழுந்து நின்ருன். கீழேயிருந்து பேசும் குரல்களை அவர்களால் கேட்க முடிந்தது. விண்ணில் நட்சத்திரங்கள் இல்லை. மூடுபனி கவிந்து கொண்டிருந்தது. அடர்ந்த புதர்களினூடே ஃபான் டார்ச் விளக்குடன் வந்து கொண்டிருந்ததை கீழே விழித் துக் கொண்டிருந்தவர்கள் கண்டபோது அங்கு முணுமுணுப்புகள் எழுந்தன. அவன் குழுவினர்கள்மீது டார்ச் விளக்கை அடித்தான். சிலர் கீழே படுத்துக் கொண்டிருந்த னர். மற்றவர்கள் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். தன் அருகில் படுத்துத் துரங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஸ்ப்ரெளட்டுக்கு தன்னு டைய ஒரு கையை நீட்டி அதை தலையணையாக ஆக்கியபடி ஈஸா ஒரு பக்கமாக படுத்து உறங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/438&oldid=753030" இலிருந்து மீள்விக்கப்பட்டது