உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439


கொண்டிருந்தாள். டுவான் நன்கு விழித்துக் கொண் டிருந்தான். அவ்வாறே ஸ்வாட்டும் சாங்ஃபூவும் பிறரும் வழிகாட்டிசைஸாம் திரும்பி வரவேண்டி காத்திருந்தனர். அவன் வந்து சேராததால் அவர் களுக்கு சங்கடமாக இருந்தது. அவர்கள் மெளன மாக இருந்தார்கள். பத்து நிமிஷங்கள் கழித்து, லைலாம் திரும்பி ஞன். மலையடிவாரத்தில் கவனித்துக் கொள்வதற் காக அசாயைத் தனியாக விட்டுச் சென்றிருந்தான் அவன். சூழ்நிலை சகஜமாக இருந்தது; ஆகவே அவர் கள் உடனடியாகப் புறப்பட்டுவிட வேண்டும். அன்றைய இரவு மற்ற இரவுகளைப் போலன்றி சற்று மங்கிய ஒளியுடன் இருந்தது. அவர்களில் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் நன்ருகவே பார்க்க முடிந்தது. அந்த மங்கிய இரவில் தூரத்தில் வெள் ளைக் கோடுபோல் தோன்றும் சாலையை அடையும் வரை அவர்கள் எல்லோரும் மிகவும் மெதுவாகவே போகவேண்டி இருந்தது. சாலையை அடைந்துவிட் டால் பிறகு நன்ருகப் பார்க்க முடியும். இருள் அவர் களுக்கு ஒரு பாதுகாப்பாக அமைந்திருந்தது. ஆபத்து ஏற்பட்டால் சுலபமாக ஒடி ஒளிந்து கொண்டுவிடலாம். சிறுவன் ஸ்ப்ரெளட்டை மீண் டும் ஸ்வாட் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்; ஜேம்ஸ் ஒரு பக்கத்திலும் ஈஸு மறு பக்கத்திலுமாக டுவான் நடந்து கொண்டிருந்தான். - நெடுஞ்சாலை வடக்கே இருந்த ஓர் ஏற்றத்துக்கு அவர்களை விரைவில் இட்டுச் சென்றது. அங்கே அவர்கள் ஒரு மலைப்பாதையில் திரும்பினர்கள்; அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/439&oldid=1275084" இலிருந்து மீள்விக்கப்பட்டது