உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440


படியே சென்ருல் அவர்கள் ஒரு கிராமத்திற்குப் போய் சேர்ந்துவிட முடியும். திடீரென்று இருட்டைப் பிளந்துகொண்டு அசாயின் தாழ்.குரல் கேட்டது. 'நான் இங்கே இருக் கிறேன்!” 'ஏதாவது தென்பட்டதா?” "அதோ அந்த வெளிச்சத்தைப் பார்த்தீர்களா? ரோந்துப்படை காவல் நிலையம் அது. இப்போது கூட அங்கு யாரோ இருக்கிருர்கள். நாம் சற்று காத்திருப்போமா?” சாலைக்குக் கீழே அவர்களுக்கு நேர் எதிர்பக்க மாக சில நூறு அடி தூரத்தில் ரோந்துப்படை நிலையம் இருந்தது. “காவலர்கள் திரும்பிச் சென்றதை நீ பார்த் தாயா?” - . "ஆம், பதினைந்து நிமிஷங்களுக்கு முன்னர்தான் அவர்கள் காவல் நிலையத்திற்குள் சென்றதைக் கண்டேன். விளக்கைப் பொருத்தினர்கள்; பிறகு தங்கள் தோள்களிலிருந்த துப்பாக்கிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன். அவர்களுடன் ஒரு நாயும் இருந்தது.” "இரண்டு பேர் மட்டிலும்தான?" "இரண்டு பேரும், ஒரு நாயும்!" அது ஒரு சிறிய காவல் நிலையம். அங்கே ஒரு சிறு ரோந்துப்படை இரவும் பகலும் காவல் புரிந்தது. அவர்கள் கோலநட்டின் வடபுறத்துப் பாதையைக் காவல் காத்து வந்தனர். எல்லைக்கு அருகாமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/440&oldid=1275085" இலிருந்து மீள்விக்கப்பட்டது