உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441


இருந்த தென்புறத்தை ஆயுதம் தாங்கிய பெரும் ரோந்துப்படை சென்று காவல் புரிந்தது. 'கீழே உள்ள சாலைக்கும் அதற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று ஸ்ைஸாமிடம் வினவினன் ஃபான். 'அதிக தூரமில்லை. சாலையில் நடப்பவர்களின் காலடியோசை அவர்களுக்குக் கேட்கும். தவிர இது போன்ற பெரிய கோஷ்டியாக இருந்தால் சற்று சிரமம்தான். எப்படியும் சந்தடி கேட்குமே!’ 'நீ ஒரு நாயைப் பார்த்ததாகச் சொன்னயே?” என்று ஃபான் கேட்டான். "ஆம்" என்று அசாய் பதிலளித்தான். அப்பொழுதுதான் அவர்களோடு வந்து சேர்ந்த மாவோபெங், 'அவை நம்மை நூறு அடிக்கு அப்பாலி லிருந்தே மோப்பம் பிடித்துவிட முடியும்; இது அபாயம் குறைந்த இடம். அவர்கள் மத்ய ரோந்துப் படை காரியாலயத்துடன் தொலை பேசியில் தொடர்புகொள்ள வசதி இருக்கிறது. ஆகவே நமது குழுவை அவர்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடு வார்கள். நாம் ஆபத்திற்குள்ளாக நேரிடும்.” 'உங்கள் யோசனை என்ன?” 'பெண்டுகளையும் குழந்தைகளையும் இங்கே விட்டுவிடுங்கள்; அவர்கள் மறைந்து இருக்கட்டும். நம்மில் சிலர் கீழே சென்று திடீரென்று அவர்களைத் தாக்கவேண்டும். முடிந்தால் சுடுவதைத் தவிர்த்தல் நலம்.” - மாவோபெங், ஜேம்ஸ், ஃபான், டிங் என்ற பெய ருடைய புது ஆட்களில் ஒருவன் ஆகிய நால்வருமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/441&oldid=1275086" இலிருந்து மீள்விக்கப்பட்டது