உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444


நீட்டிப் பிடித்துக்கொண்டே இருளை நோக்கி, "யார் அங்கே? யார் அங்கே?' என்று கூக்குரல் எழுப்பிய வண்ணம், வெளியே பாய்ந்தான். அவன் வெளியே ஒடுமுன் ஜேம்ஸ் பின்னலிருந்து தாவி தனக்குப் பழக்கமான பிடி' முறையில் அவ னுடைய கழுத்தில் கையைப் போட்டு மடக்கிப் பிடித்தான். அவன் உடம்பு துவண்டு தரையில் சாய்ந்தது. - நாய் திணறித் திணறி ஒன்றிரண்டு தடவை குரைத்தது. ஃபான் கதவைத் தள்ளித் திறந்தான். நாய் பாதி உருமலுடனும் பாதி முனகலுடனும் அவன்மேலே பாய முயன்றது. ஆனல் அது அப்படியே சுருண்டு பின்னல் விழுந்தது. ஃபானிடம் ஒரு முரட்டுத் தடி இருந்தது. அதனல் அதன் தலையில் அவன் போட்ட ஒரே அடியில் அந்த நாய் முடிவான மெளனத்தில் மூழ்கியது. ரத்தம் தோய்ந்த தனது கத்தியை நாயின் தொண்டையில் சொருகிக் கிழித்தான் டிங். இவை யாவும் சில விநாடிகளில் நடந்தேறி விட்டன. இதற்குள்ளாக, அசாய் சாலையிலிருந்து ஓடிவந்தான். திறந்த கதவிலிருந்து வந்த வெளிச்சம் இரண்டு உடல்கள் ஒன்றின்மேலொன்ருகக் குறுக் காகக் கிடந்ததைக் காட்டியது. "இப்போது நாம் என்ன செய்யப்போகிருேம்?” என்று அவன் கத்தின்ை. ஒருவரும் பதில் சொல்லவில்லை. ஜேம்ஸ் வீட்டை ஆராய்ந்துகொண்டிருந்தான். மாவோ பெங் தொலை பேசிக் கம்பிகளை வெட்டிக்கொண்டிரு ந்தான். நாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/444&oldid=1275088" இலிருந்து மீள்விக்கப்பட்டது