பக்கம்:இலட்சிய பூமி.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455


மாகத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண் டான். இருவரின் குல்லாய்களும் ஒன்றையொன்று தொடும் அளவுக்கு நெருக்கமாக நின்று தலைகளைச் சேர்த்தவண்ணம் ஒரு தீக்குச்சியைக் கொளுத்த ஜேம்ஸ் உரசினன். அது அணைந்துவிட்டதால், இரண்டாவதொன்றை பற்றவைத்தான். 'உங்களுடைய தீக்குச்சிகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்களுடைய பிளாஸ்டிக் பைகளில் ஒன்றில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்." 'அதற்கு அவசியமில்லையென்று நினைக்கிறேன். கடைசி ஒன்றை என்னிடம் கொடுங்கள். நானும் இழுத்துப் பார்க்கிறேன். நீங்கள் சுதந்திர நகரைச் சென்றடையும் வரை மீண்டும் சிகரெட்டைப் புகைப் பீர்களென்று நான் நினைக்கவில்லை!” என்ருள் ஈஸ்". 'நீங்கள் இப்போதே அங்குபோய்ச் சேர்ந்து விட்டதைப் போன்று பேசுவது கேட்பதற்கு நன்ருக இருக்கிறது” என்று ஃபான் தெரிவித்தான். 'மறுபடியும் உங்களுக்குப் புகை, இன்றிரவு கிடைக்கும் வெடி மருந்துப் புகைதான். இன்றிரவு சிகரெட்டுகள் துப்பாக்கி மருந்துகளிலிருந்துதான் தயாரிக்கப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கூறினுள். . . .” - - - - "அது உனக்கு எப்படித் தெரியும்?' என்று ஃபான் வினவினன். “ஆம் ஒருவகையான வெடியுப்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றது. அவ்வெடியுப்பு அவைகளை அணையாமல் எரியவைக்கின்றன. எனவேதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/455&oldid=1275097" இலிருந்து மீள்விக்கப்பட்டது