பக்கம்:இலட்சிய பூமி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456


சிகரெட்டுகள் தாமாக அணைந்துவிடுவதில்லை. புகை யிலை தானக அணைந்துவிடும். அதே மூலப்பொருளைத் தான் திரியில் சுற்றி அதை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டாக (டைம் பாம்) உபயோகிக் கிருர்கள்!' - அவன் மழைத் துளிகளைப் பிடிப்பதற்காக முகத்தை மேலே திருப்பிக்கொண்டு திமிர் பிடித்த பாவனையில் குப் பென்று சத்தமிட்டான். : 'நீ அதை சுகமாக ரசித்துக்கெண்டிருக்கிருய் என்பது தெரிகிறது” என்று ஜேம்ஸ் கூறினன். "ஆமாம், நான் ரசிக்கிறேன்.” 'நீ வெடிமருந்தைக் கண்டு பயப்படவில்லையா?” நான் அதை வரவேற்காவிடினும், அதைப் பார்த்துப் பயப்படவில்லை. சிறிதளவு துர்நாற்ற முடைய பட்டாசுகளை நீங்கள் சகித்துக்கொள்ளு கிறீர்கள் அல்லவா? இதுவும் அதே வாடைதான் என்று நான் கூறுகிறேன், என்னுடைய குழந்தைப் பருவத்தின் புது வருடக் கொண்டாட்டத்தை நான் எப்பொழுதும் ஞாபகத்தில்வைத்திருக்கிறேன். நகரம் முழுவதுமே பட்டாசுகளின் வாசனைகளில் திளைத்திருந்தது. துப்பாக்கி மருந்தின் வாடை அப் போது உண்மையிலேயே ஒவ்வொருவரையும் இன்ப மடையச் செய்கிறது. நல்லது. நமது கடைசிச் சிகரெட்டு இதோ இருக்கிறது!” ஃபான் சிரித்தான். "நீங்கள் புகை பிடிப்பதற்கு மாற்ருக எரியும் துப்பாக்கி மருந்தைப் புகைக்கச் சொல்லவில்லையே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/456&oldid=1275098" இலிருந்து மீள்விக்கப்பட்டது