உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45? "ஏன் இல்லை?....? என்று உணர்ச்சிகரமாகப் பதிலளித்தாள் ஈஸ்". - ஓர் அறையை பட்டாசுகளின் அல்லது வெடி மருந்துகளின் நாற்றத்தால் நிரப்புங்கள். ஒருவரும் புகை பிடிக்க வேண்டியிருக்காது!” - மூவரும் சேர்ந்து புகைபிடித்து அநேக தடவை குப்பென்று புகையை வெளியிட்டவண்ணம் ஒருவருக் கொருவர் சிரித்துக்கொண்டார்கள். - எஞ்சிய சிகரெட்டுத் துண்டுகளை, ஷாம்பேன் மதுக்கிண்ணங்களை எறிவதுபோல் தரையில் வீசி யெறிந்தார்கள் அவர்கள். 'விரைந்து வாருங்கள். நாம் சென்று ஒரு தடவை பார்க்கலாம்” என்று ஜேம்ஸ் உரைத்தான். ஈஸ் மிகவும் கலகலப்பாக இருந்தாள்.காரணம் அன்று விடியப்போகும் நாளின் இரவில் அவர்கள் ஹாங்காங்கில் இருப்பார்கள் என்ற மகிழ்ச்சியே அதன் காரணம். ஜேம்ஸின் கைகள் அவளைச்சுற்றி அணைத்திருக்க அவள் சுறுசுறுப்பாக நடந்தாள். - அவர்களைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய துரத் தில் ஃபான் நடந்துக்கொண்டிருந்தான். எல்லையின் இடதுபுறத்திலும் வலது புறத்திலும் குறுக்காவும் அடுத்தடுத்த சிகரங்களும் மேடு பள்ளங் களும் காட்சியளித்தன. கீழ்த் தளத்தில் குறுகலான தொரு வெள்ளிப்பட்டைபோன்று சம்சன் நதி தென் பட்டது. அதன் இரு மருங்கிலும் வெள்ளைச் சிமிட்டி யிலான கம்பங்களால் பாதுகாப்பாக நின்றன. நதி கிழக்கு மேற்காக நேர்கோட்டில் ஓடிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/457&oldid=753051" இலிருந்து மீள்விக்கப்பட்டது