பக்கம்:இலட்சிய பூமி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458


டிருந்தது. மேற்கே சற்றுத்தள்ளி, குன்றுகளால் நதியின் பிரவாகம் மறைக்கப் பட்டிருந்தது. எல்லையை நோக்கி அமைந்திருந்த பள்ளத்தாக்கி லிருந்த இரண்டு குன்றுகளுக்கிடையே இருந்த ஒரு சுவட்டுப்பாதை, அடர்ந்த பகஞ்செடிகளினல் மறைக் கப்படாமலிருந்ததால், வெவ்வேறு பிரிவுகளாகத் தென்பட்டது. - ஜேம்ஸ் தன் சட்டைப் ையிலிருந்த திசை காட்டும் கருவியை எடுத்து, திசையைக்கண்டான். சைசாம் மேலே ஏறிவந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள்; அவனுடன் ராணுவ உடுப்பு அணிந்த ஒருவனும் வந்துகொண்டிருந்தான்; அவ னுடைய அகலமான செம்படவன் தொப்பியும் கால் துணிப்பட்டையும் அவனை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருந்தது. அவனுடன் வந்தவன் மாவோபெங்! "மாவோபெங்கைப்பற்றி நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?" என்று ஜேம்ஸ் கேட்டான். 'அவன் நல்லவன் என்றே நினைக்கிறேன். கடந்த இரவு அவனை நான் காவல் நிலையத்தில் பார்த்த பொழுது, அவன் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டான். ஆனல், திட்டமிடுவது வேறு, களத் தில் இறங்கி செயல்புரிவது வேறு. ஒருவனுடைய நடத்தையை அறியவேண்டுமானல் அவன் கஷ்டத் தில் சிக்கிக்கொள்ளும்போதுதான் நன்கு அறிய முடியும். "நம்முடன் உள்ள மற்ற இருவர்களும் நல்லவர் களாகவே தோன்றுகிருர்கள்” என்று சொல்லிவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/458&oldid=1275099" இலிருந்து மீள்விக்கப்பட்டது