உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459


ஃபான் மேலும் தொடர்ந்தான்: "அவர்கள் எல்லோ ருமே நல்ல வலுவுள்ளவர்கள். தன்னுடைய கையில் ரத்தம் தோய்ந்த கத்தியோடு காவல் நிலையத்திற்குள் வந்தபோது, டிங்கின் முகத்தை வெளிச்சத்தில் நான் நோக்கினேன். அவன் அதை விரும்புவதாகவே தென்பட்டான்.” 'என்ன நடக்குமென்று நீங்கள் ஒருபோதும் சொல்லமுடியாது. என்ன இருந்தாலும் அவர்கள் குடியானவர்கள்!....இதற்கு முன்னல், ராணுவத்தில் இருந்தவர்கள் அல்லர். அவர்களில் சிலர் வெறி கொண்டு சண்டையிடலாம்; அவர்கள் கட்சி'யைச் சேர்ந்த ஓர் ஆளைக் கொல்லும்பொழுது, காரணத் தோடுதான் கொல்லுவார்கள்; அவர்கள் தங்களது மனைவியையோ குழந்தையோ தங்களுடைய பூர்வீக நிலபுலன்கள் முழுவதையுமோ இழந்திருக்கலாம். சண்டை ஆரப்பமாகும்பொழுது, ஒவ்வொருவனும் தன்னுடைய சொந்தத் திறமையில் சண்டையிடு கிருன். அவர்கள் சில சமயம் பிறரைக் கொல்ல நினைக்கலாம்; அதே சமயம் நதியைக் கடக்க மறந்து விடலாம்" என்று கூறிவிட்டு ஜேம்ஸை உற்றுக் கவ னித்தான். "மாவோ நமது கூட்டத்திற்கு தளபதிபோல இருக்கிருன்; பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங். களைப்பற்றி நான்அவனுடன் பேசவேண்டும்'என்ருன் ஜேம்ஸ். . 'இது நான் போட்ட திட்ட மே அல்ல ரத்தம் சிந்தும் தாக்குதலை நாம் விரும்பினதில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/459&oldid=1275100" இலிருந்து மீள்விக்கப்பட்டது