உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460


"ஒரு வேளை அவர்களுடைய திட்டங்கள் நல்ல வையாக இருக்கக்கூடும். நான், ஹூவாங்கின் கூட்டத்தினரைப்பற்றி நல்ல விதமாகவே நினைக் கிறேன்." - அப்போது மாவோவும் ஸையும் கூப்பிடு தூரத்தில் வந்தார்கள். 'ஹல்லோ! அதோ!... 'நாம் கீழே சென்று அவர் ளொடு சேர்ந்து கொள்ளவேண்டுய். நான் உங்களைக் கீழே கூட்டிச் சென்றபின், உங்களிடமிருந்து பிரிந்துவிடுவேன்' என்று ஸ்ைஸாம் கூறினன். இப்பொழுது கனம் குறைந்துகொண்டிருந்தது; மழைத்துாறல் நின்றுவிட்டிருந்தது. பள்ளத்தாக்கில் உருவங்கள் மங்கலாகத் தெரிந்தன. பெரும்பாலா னேர் உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ இருந்தனர். ஸ்ப்ரெளட் அப்போதும் அயர்ந்த நித்திரைமில் இருந்தான். - மாவோபெங் கூட்டத்தினருக்குக் கட்டளை பிறப் பித்துக்கொண்டிருந்தான். "நாம் கீழே சென்று அவர்களுடன் சேர்ந்து கொள்வோம். அது ஒரு அமைதியான காடு. வழுக்கி விழாமல் ஜாக்கிரதையாகக் கீழே இறங்குங்கள். தரை சில இடங்களில் பிசுபிசுப்பாக இருக்கிறது. நாம் போய்ச் சேரும்வரை ஏதாவது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால், தரையில் படுத்துவிடுங்கள்; துப்பாக்கிச் சூடு முடியும் வரையில் எழுந்து ஓடாதீர்கள்!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/460&oldid=1275101" இலிருந்து மீள்விக்கப்பட்டது