உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 22 கிாட்டிற்குள் அவர்கள் ஒன்று கூடிய பொழுது, "இங்கே நாம் பத்திரமாக இருக்கிருேம்' என்று ஹவாங் புதிய ஆட்களிடம் கூறினன். 'கீழே உள்ள பாதை நெடுகிலும் கடந்து செல்லும் ஜனங்களை நீங்கள் பார்க்கையில், குழப்பமடைந்து விடாதீர்கள். ரோந்துப் படையினர் இவ்வளவு துாரம் வருவார்கள் என்று நான் கருதவில்லை. ஆறு மணிக்கு நாம் கீழே போகலாம். அதுவரையில் பரவலாகப் பிரிந்து, மறைந்து கொள்ளுங்கள்.” அவன் தன் கூட்டாளியான சூபாதாவிடம் திரும்பி, "நீங்கள் ஏதாகிலும் கூற விரும்புகிறீர் களா?” என்று கேட்டான். சூபாதா அவனது இரண்டாவது தளபதி, அதாவது அவன் அவ்வாறு விரும்பினன். - சூ நிமிர்ந்தான்? அவன் வழக்கமாக எப்போதும் குனிந்து கொண்டிருப்பான்: "நான் என் ஆட்களிடம் சொல்லியிருக்கிறேன்; அதையே இப்பொழுது உங்க ளிடமும் சொல்கிறேன். இருள் பிரிவதற்கு முன்னல் நம்மை யாரும் கண்டுபிடிக்கவில்லையானல், நமக்கு அது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/461&oldid=753056" இலிருந்து மீள்விக்கப்பட்டது