பக்கம்:இலட்சிய பூமி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462


நாம் ரோந்துப் படையிரை எதிர் பார்க்காமல் தாக்கிப் பிடிக்க முடிந்தால், பாதி வேலை முடிந்த மாதிரிதான். ஆளுல் கீழே போவதற்குமுன் அவர்கள் நம்மைக் கண்டு கொண்டு விட்டால் நம்முடைய திட்டத்தில் பாதி தோல்யடைந்ததாகும்' இதை அவன் சுருக்கமாகவும், ஆளுல் கண்டிப்பாகவும் கூறினன். மேகங்களின் இடுக்கு வழியாக நோய் பிடித்தது போல் கதிரவன் வெளுத்து வெளிக் கிளம்பினன். ஆனல் மிகவும் வரவேற்கத்தக்க காட்சியாக அது இருந்தது. நிச்சயம் வரவேற்கக் கூடியதுதான். வானத்தின் பெரும் பகுதி அப்போதும் மேங்களால் சூழப்பட்டிருந்தது. ஆனல், மேற்கில் தெளிந்த நீல வானத்தின் மீது தூரத்தில் இருந்த மேகம் மென் மையான இளஞ் சிவப்பு நிறத்தோடு பிரகாசித்தது. அப்போது ஒவ்வொருவரும் விரும்பியது. குளிர் காய் வதற்குரிய ஒரு சந்தர்ப்பத்தையேதான். சிறிது வெய் யில்வந்தாலும் போதும் அவர்களுக்கு அது சுகமாக இருக்கும். இதைத் தவிர வேறு செளகரியம் எதுவும் அவர்களுக்கு தேவை இல்லை. அவர்கள் இயற்கை யையே நம்பி எல்லையைக் கடந்து செல்லும்போது தங்களை மறைத்துக் கொள்ள இருட்டை விரும்பி ஞர்கள். இன்னும் சிலமணிநேரமே பாக்கி இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும்விட, தாங்கள் சுகமாக வும் சிறிதளவு கதகதப்பாகவும் இருக்க சிறிது வெய்யிலேயே விரும்பினர்கள்: கடல் மட்டத்திலிருந்த சிற்ருேடைக்கு அறுநூறு அடி உயரத்தில் அவர்கள் இப்போது இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/462&oldid=1275102" இலிருந்து மீள்விக்கப்பட்டது