உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


"ஊஹாம், அப்படியல்ல!" என்று சொல்லி உள்ளார்ந்த மென்மையான நகைப்புடன் தொடர்ந் தாள். 'அந்தப் பையன், மற்றப் பையன்களையெல் லாம் அதிகாரம் செய்துகொண்டு, ஒரு குட்டிச் சைத்தானகவே இருக்கிருன். பொதுவுடமைப் புனர் நிர்மாணக் கிட்டங்கிக்கு அருகில் வீதியைச் சுற்றி விளையாடுகிருன்; திரும்பி வரவேண்டிய உரப்பகுதி இராணுவக் குழுவை எதிர்பார்க்கிருன். கூடையில் துர்நாற்றம் மிகுந்த உரங்களைச் சுமந்தவாறு திரும்பி வரும் பையனைப் பார்த்தால், உடனே தன்னுடைய கூடையை நோக்கித் தன் ஆள்காட்டி விரலை அசைத் துக்காட்டி, "இங்கே போடு!" என்று அதிகாரம் பண்ணுகிருன் மற்றப் பிள்ளைகளும் அமைதியுடன் அவன் கூடையில் ஆளுக்குக் கொஞ்சம் போடுகிருர் கள். தானே தன் சொந்த முயற்சியின்பேரில் எல்லாவற்றையும் சேகரம் செய்த மாதிரி பாவனை செய்து உள்ளே சமர்ப்பிக்கிருன்!” ஜேம்ஸ் ஆச்சரியமடைந்தான். 'உங்களுக்கு இவையெல்லாம் எப்படித் தெரிந்தது?” என்று விசாரித்தான். 'ஈஸ்டு சொன்னுள்: அவளுடைய சின்ன மருமக னை முட்டி ஸ்ப்ரெளட், ஆசாயின் துணைத் தலைவன் மாதிரி எப்போது பார்த்தாலும் அவனைக் சுற்றியே வளைய வளைய வருகிருளும் இளைய ஸ்ப்ரெளட்டுக்கு வயசுபத்தோ,பதின்னென்ருேதான். அந்தச் சின்னஞ் சிறு பையன் ஆசாயைத் போன்றே ஆகிவிடுவானே என்று ஈஸ்-வுக்கு வருத்தம். நகரத்தில் உள்ள ஒவ் வொரு நபரையும் அவன் பயமுறுத்தி அடக்குகிருன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/46&oldid=1274824" இலிருந்து மீள்விக்கப்பட்டது