உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464


மிகவும் நன்முக இருக்கிறது, அவற்றை நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்" என்று சொன்னன் அவன். "ரோந்துப் படையினரின் ராணுவ உடுப்புக் களையும் கூட நாம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்," என்று சூடாதா கூறினன். சூ மெலிந்தும் உயரமாயும் இருந்தான். தப்பிச் செல்வதற்கு யோசனை கூறுபவர்களில் அவன் முக்கிய இடம் வகித்தான். சிறந்த கருத்துக் களை வழங்கினன்; கொரியாப் போரில் அவன் பங்கு கொண்டிருந்தான்; ஆனல், ஹவாங்கின் தளபதி போன்ற தோற்றமும் மிடுக்கும் அவனுக்கு இல்லை. குழுவினரில் பாதிப்பேர் கறுப்புத் தலைப்பாகை களைத் தரித்தனர். அது சூவின் யோசனைகளுள் ஒன்று. ஓர் எதிரியை முதுகுப் புறத்திலிருந்தபடி குரல்வளையைத் திருகிக் கொல்வதற்குத் தலைப்பா கைகள்தான் மிகவும் சிறந்தவை. அவைகளை ஒன்று சேர்த்து மூடிபோட்டு பயனுள்ள கயிருகச் செய்து கொள்கிருர்கள் அவர்கள். அரசாங்கப் பண்ணையில் தங்கி இருந்தபோது, இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாவற்றையும் சிந்தித்திருந்தான் சூ. பெண்களும் குழந்தைகளும் இருந்த குழுவைச் சற்று வியப்புடன் பார்த்தான் ஹவாங். - ஃபானையும் ஆங்கிலேயனையும் மாவோபெங் அறிமுகப்படுத்தி வைத்தான். 'ஏதாவது விசேஷம் நடந்ததா?" - 'ஒன்றுமில்லை. நாங்கள் மூன்று மணிக்குத்தான் மேலே வந்தோம்; நீங்கள் எங்கே ஒளிந்து கொண் டிருக்கிறீர்களென்று வியந்தோம்; பிறகு ஜேம்ஸின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/464&oldid=1275104" இலிருந்து மீள்விக்கப்பட்டது