உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

465


பக்கம் திரும்பியபடி, உங்கள் துப்பாக்கி உங்களிடம் தானே இருக்கிறது?’ என்று அவன் வினவினன். ஜேம்ஸ் இணக்கமாகத் தலையை அசைத்தான். "குண்டுகள்?” 'ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் இருக்கின்றன!” 'அவ்வளவுதான?” ஸைஸாம் திரும்பி வந்து கொண்டிருந்ததை அறிவிக்க அசாய் வந்தான். ஸ்ைஸாம் அவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான். 'நீங்கள் எங்களோடு வரவில்லையா?” என்று ஹவாங் கேட்டான். - 'இல்லை. அந்தக் கோஷ்டியினரை இதுவரை நான் கொணர்ந்து சேர்த்தேன். இப்போது அவர் களை தக்கோருடன் சேர்த்துவிட்டேன். இனிக் கவலை இல்லை." ஃபானும் ஜேம்ஸும் அவனுடைய உதவிக்காக நன்றி தெரிவித்தார்கள்; அவனுக்குரிய ஊதியத்தை ஃபான் கொடுத்தான்; தாங்கள் அவனை நினைவில். வைத்துக் கொண்டிருப்போம், என்று கூறினர்கள். ஃபான் அவனைப் பாராட்டினன். தங்களது.அடுத்த திட்டத்தைப் பற்றியும், அதில் பெண்டுகளும், குழந்தைகளும் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதைப்பற்றியும் அறிவதற்கு ஃபானும் ஜேம்ஸும் பெரிதும் விரும்பினர்கள். "எங்கள் குழுவில் சண்டை செய்கிறவர்களைவிட சண்டை செய்யாதவர்களே அதிகம் உள்ளனர்இதற்காக நான் வருந்துகிறேன். உங்கள் ஆட்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/465&oldid=1275105" இலிருந்து மீள்விக்கப்பட்டது