உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466


அவர்கள் ஒரு சுமையாக இருப்பார்களென்று நான் அஞ்சுகிறேன்" என்ருன் ஃபான். "நிலைமை அப்படித்தான் இருக்கிறது; அங்கு எத்தனை பேர் இருக்கிரு.ர்கள்?” 'சென்ற இரவில் எங்களுடன் சேர்ந்து கொள் ளும்படி உங்களுடைய ஆங்கிலேய நண்பரை நான் கேட்டபோது, மூன்று பெண்கள்ம்ாத்திரமே இருந்த தாக நான் எண்ணினேன்.” சோலையிலிருந்த குழுவி னரை எட்டிப் பார்த்தான் அவன். "நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.” "அங்கே என் மனைவியும் அவரது மனைவியும் இருக்கிரு.ர்கள். குழு இப்போது சற்றுப் பெருத்து விட்டது. பட்டினியால் உயிர் போகும் நிலையில் ஒளிந்திருந்த பத்து வயதுப் பையன் ஒருவனைக் கண்டுபிடித்தேன். செங்குத்துப் பாறையிலிருந்து அவன் பெற்ருேர்கள் விழுந்து விட்டனர். அப்போது அவன் இதுவரை வந்து, பின்னர், திரும்பி ஓடி விட்டான். இப்போது அவனையும் நான் உடன் அழைத்துச் செல்லவேண்டி யிருக்கிறது.” "அத்துடன். என் மனைவியின் சிறு மருமகனும் என்னுடைய மாமனரும் இருக்கிருர்கள்” என்று ஜேம்ஸ் சேர்த்தான். - "அது சரிதான். அவர்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டார்கள்; அவர்களும் நம்மோடு கடந்து வந்துவிட முடியும் நன் வாக்குக் கொடுத்துள்ளேன்: அதைக் காப்பாற்றியும் வருகிறேன். இப்போது உளவு அறியும் வேலை கொஞ்சம் இருக்கிறது. பிறகு தான் நமக்கு நிலைமை புரியும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/466&oldid=1275106" இலிருந்து மீள்விக்கப்பட்டது