உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46% ஆகாய விமானங்கள் மேலே கடந்து கொண் டிருந்ததைப் போல, தலைக்கு மேலே தேய்ந்த ரீங் காரச் சத்தமொன்று கேட்டது. குழுவினரில் சிலர் அ ைத க் கவனிப்பதகற்ாகத் தோப்பிலிருந்து விரைந்து வெளியே வந்தனர். “அது சியாங்கே-வுேக்கின் ஆகாய விமானமாக இருக்க வேண்டும்” என்ருன் அசாய். 'அது அமெரிக்காவின் விமானமாகவோ அல் லது பிரிட்டனைச் சேர்ந்த வேவுபார்க்கும் விமான மாகவோ இருக்கக்கூடும். ஏன் கம்யூனிஸ்ட் சீனவின் விமானமாகவும்கூட இருக்க முடியும்!” "அது கம்யூனிஸ்ட் விமானம் அன்று” என்ருன் சூ பாதா. “கடந்த அக்டோபரில் ஃபார்மோஸா ஜல சந்தியின் காரணமாக விதிவசமாய் ஏற்பட்ட சண் டைக்குப் பிறகு அவை தலைமறைவாக இருக்கின்றன; கம்யூனிஸ்ட் விமானம் கண்ணில் பட்டவுடனேயே ராட்டில் பாம்பு (அமெரிக்க பீரங்கி) அதை விழுங்கி விடும்” என்ருன் சூபாதா. 'கடந்த வருஷம் வெய்ச்சோவில் ட்ராகன் படகுத் திருவிழாவின்போது சியாங்கே-ஷேக்கின் விமானங்கள் உணவுப் பொட்டலங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வானத்திலிருந்து பொழிந்ததை நாங்கள் கண்டோம்” என்ருன் அசாய். ஹவாங் பையனை ஏற இறங்க நோட்டமிட் டான். 'உனக்கு வயது என்ன?” 'பதினைந்து!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/467&oldid=753062" இலிருந்து மீள்விக்கப்பட்டது