பக்கம்:இலட்சிய பூமி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463 'அவன் பொய் சொல்கிருன். அவனுக்கு வயது மெய்யாகவே பதினன்குதான்!” என்று அன்பு தவ ழும் முறுவலுடன் ஃபான்கூறினன். 'எனக்குப் பதினைந்துதான். நீங்கள் லெய்வா வைக் கேளுங்கள்." 'வாயை மூடு' என்ருன் ஃபான், பிறகு அவன் தொடர்ந்தான்; அவன் உண்மையில் நமக்கு ஒரு சிறந்த சாரணகை இருக்கிருன். அவன் இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது.” அசாய் திருப்தியடைந்து புன்னகை செய்தான். தன்பால் வைத்திருந்த அளவிட முடியாத மதிப்பை மறைத்துக் கொள்ளுவதற்கு அவன் இன்னமும் கற்க வில்லை. ஹவாங் அவனை அரவணைக்க வேண்டி இருந் தது. வேறு வழி இல்லை. அவன் ஜேம்ஸிடம்,'அவன் உங்கள் மனைவியின் உறவினர்களில் ஒருவன? அல்லது ஃபானின் உறவினன?” என்று கேட்டான். 'அவன் என் மனைவியின் சுவீகார மகன்” என்று அவனுக்காக ஃபான் மறுமொழி பகர்ந்தான். ஹலிவாங் ஒருகணம் யோசனையில் ஆழ்ந்திருந் தான். பிறகு ஆள்காட்டி விரலைச் சுட்டிக்காட்டி 'அசாய் இங்கே வா” என்று அழைத்தான். அசாய் பல்லே இளித்தவாறு திரும்பினன்.தனது சட்டைப்பைக்குள் கைகளை விட்ட வண்ணம் நிதான மாக கம்பீரத்துடன் கால்களை அகட்டி தலைநிமிர்ந்து நடந்துவந்தான். - -- "நான் உனக்குச் சில வேலைகள் வைத்திருக்கி றேன், நீ இங்கேயே இரு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/468&oldid=753063" இலிருந்து மீள்விக்கப்பட்டது