உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472


அவன் இருந்த இடமே தென்படவில்லை. அவன் அப்போதே உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு விட்டான். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த உளவு பார்க்கும் கூட்டத்தினர் வடக்கிலிருந்து சாய்தளத் தின் மேலேறித் திரும்பி வந்தார்கள். சூரியன் பிரகா சித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் தங்களை யாரும் காண முடியாத வண்ணம் காட்டின் புதர் களிலிருந்து வெளியே வந்து கீழே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் உட்கார்ந்தும் படுத்தும் கதிர வனின் வெப்பம் படும்படி கீழே சாய்ந்துகொண்டும் பரவலாகச் சிதறி இருந்தார்கள். கடினமான இரவுக் குப்பின் அவர்களில் பலர் அயர்ந்த துரக்கத்தில் இருந்தது அமைதியான ஆட்டுக்கிடை ஒன்று பரவிக்கிடப்பதுபோல் காட்சியளித்தது. சிறுவன் ஸ்ப்ரெளட் தன்னுடைய தாத்தாவின் தாடியைச் சோதனை செய்துகொண்டிருந்தான். தாடியின் இழைகளைப் பிரித்தெடுத்து தன் உள்ளங்கையில் ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தான். பேரன் ஸ்ப்ரெளட்டை வேடிக்கையாக விளையாடட்டு மென்று கிழவனும் பேசாமல் தரையில் நீட்டிப்படுத் திருந்தான். ஹவாங் தனது கைகளைக் கண்களுக்கிடையே வைத்தபடி அமர்ந்திருந்தான். அவன் சுவாசிக்கும் போது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கிய வண்ணம் இருந்தது. - - அசாய் திடீரென்று தோன்றி அவனைத் தட்டி எழுப்பக் குனிந்தான். கைகளை அகற்றி நிமிர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/472&oldid=1275109" இலிருந்து மீள்விக்கப்பட்டது