உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4?" 'அப்படியானல் அகதிகள் இவ்வழியே வருவார் களென்று நீங்கள் எதிர்பார்க்கவில்லையா?” 'இல்லை. எப்படியும் எங்கள் நிலையத்திற்கு இருட்டுவதற்குள்ளாகத் திரும்பி விடுவோமென்று நான் சொன்னேன்.” ஹாலிவாங் வரைப் படத்தை எடுத்து முழுமை யாக விரித்தான். பிறகு ஆபத்தான பகுதி என்று காட்டப்பட்ட இடத்தில் சிறு பிரிவாகத் திரும்ப மடித்தான், பிறகு அதில் உள்ள வழிகளை மீண்டும் ஆராய்ந்துவிட்டு டென்ஸானை அம்முனைகளைக் குறிப் பிடச் சொல்லி அவற்ைறப் பென்சிலால் அடை யாளம் செய்தான். அவன் சில கஜ தூரம் தள்ளிச்சென்று அமர்ந்து சூபாதாவுடன் தங்களுடைய யுத்த தந்திரங்களைப் பற்றிக்கலந்து பேச ஆரம்பித்தான். பெரிய காவல் நிலையம் இருக்கும் பெய்குங்கா வோவும், அந்த இடத்துக்குச் சற்று மேற்கே தள்ளி இருந்த ஜிங்கெளசுன் என்ற இடமும் அபாயகரமான முனைகள் என்பது நெளிவாகத் தெரிந்தது. ஜிங்கெள சுனுக்குக் கிழக்கே கடலை நோக்கி பரந்துகிடந்த நெல் வயல்களோடு கூடிய நிலபரப்பு ஒன்று இருந்தது. வயல்களைத் தாண்டிச்செல்ல நினைக்கும் எவரும் அந்தத் திடலை தாண்டும்போது ஒளிவிளக்கினல் அடையாளம் காட்டப்பட்டுவிடுவர். அதே சமயம் சற்றுமேற்கே தள்ளி வலது புறமாக உள்ள இரண்டு ரோந்துக் காரர்களுக்கு இடையே பிடிபட்டுவிடு வார்கள். இங்கு ஒரு மோதல் தவிர்க்க முடியாத தாகத் தென்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/477&oldid=753073" இலிருந்து மீள்விக்கப்பட்டது