உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476


இந்த இடத்தில் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. நிலையத்திலிருந்து சுமார் நூறு கஜ. தூரத்தில் சம்சம் நதிக்கு நாங்கள் வந்தோம்.” 'அது எங்கே இருக்கிறது?” "லியுவான் சாலை எல்லைக்கு வரும் இடத்தில் ஜிங்க்கெளசுனில் இருக்கிறது. அங்கு சில பண்ணை வீடுகளும் இருக்கின்றன; அதோடு, ஒரு பத்தடி உயரமுள்ள கம்பத்திலிருந்து ஒர் ஸர்ச்லைட் ஒளி விளக்குத்துரண், வெளியேநீட்டிவிடப்பட்டு இருக் கிறது!” - 'நீங்கள் அங்கு காவலாளிகளைச் சமாளித் தீர்களா?” "நாங்கள் நேராக அவர்கள் இருந்த இடம் வரைக்கும் நடந்தோம். அவர்கள் எங்களை தங்களைச் சேர்ந்தவராகவே நினைத்தார்கள். நான் தாம்ஷ்யூ பேசுகிறேன்.” "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’ என்று ஒருவன் சகோதரபாவத்துடன் கேட்டான். “எங்கள் தொலைபேசி பழுதாகிவிட்டது. யாரை யாவது கீழே அனுப்பி அதைச் சரி பண்ணச்சொல் வதற்காக நாங்கள் மேலே போகிருேம்'என்றேன். "அங்கே எத்தனைபேர் இருந்தார்கள்?’ என்று ஹாலிவாங் கேட்டான். "பன்னிரெண்டு பேர்கள் இருந்தார்கன். எல் லோரும் ஆயுதம் தரித்தவர்கள். வடக்கிலிருந்து யாராவது மேலே வந்து கொண்டிருந்ததைப் பார்த் தீர்களா என்று ஒருவன் எங்களைக் கேட்டான். யாரு மில்லை! என்று சொன்னேன்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/476&oldid=1275113" இலிருந்து மீள்விக்கப்பட்டது