உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475


"சரியாக எந்த இடத்தில் அந்த ரோந்துப்படை யினர் இருந்தனர்?” "சாஜிங்டோவிலிருந்து நெல் வயல்களுக்குமேல் நூறு அடி உயரத்தில் ஒற்றையடிப் பாதையில் இருந் தார்களென்று சொல்லலாம். அங்கிருந்து சம்சன் அரைமைல் தூரம்தான் இருக்கும்!” "நான்கு பேர்தான் என்று கூறினீர்களா?” "ஆம். இருவர் தங்கள் தோள்களில் துப்பாக்கி களைத் தாங்கியவண்ணம் நின்றிருந்தனர். மற்றிருவர் புல்தரையில் அமர்ந்திருந்தனர்; அநேகமாக அவர்கள் பகல் உணவுக்காக கீழே செல்லக் காத்திருந்தனர்." என்று நினைக்கிறேன்.” 'நீங்கள் சென்றவுடனேயே அவர்கள் கடலை நோக்கிச் செல்வதை நான் பார்த்தேன்” என்ருன் அசாய். 'இன்னும் என்ன பார்த்தாய்?’ என்று ஹாலிவாங் பையனைக் கேட்டான். 'அதன் பிறகு, சிறிது நேரம் அவர்களைப் பார்க்க வில்லை. பாதை, செங்குத்தான மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளதால் நான் அவர்களைப் பார்க்க முடியவில்லை. நான் மறுபடியும் மேலே ஏறினேன். அப்போது அவர்கள் மேலே வந்துகொண்டிருந் ததைப் பார்த்தேன்.' "கொஞ்சம் இரு!” என்று டென்ஸான் கூறினன். அங்கேஒரு கூர்மையான வளைவு இருக்கிறது.நாங்கள் லிவானிலிருந்து எல்லைக்குச் செல்வதற்காக சாலை யைப் பிடித்த இடத்தில் சரியாக நமக்கு இடது பக்கத்தில் நிலப்பரப்பு சரிவாக அமைந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/475&oldid=1275112" இலிருந்து மீள்விக்கப்பட்டது