உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474


உள்ளது நாங்கள் பெர்ல் கிராமத்திலிருந்து பள்ளத் தாக்கைச் சுற்றிவரும் ரோந்துக் காவல் படையினர் என்னும் அபிப்பிரா ய த் ைத உண்டுபண்ணிக் கொண்டு இவ்வட்டாரத்தின் முழுப்பரப்பையும் பரி சோதிக்க விரும்பினேம்." 'நீங்கள் ரோந்துக்காரர்சளில் எவரையாவது சந்தித்தீர்களா?” 'ஷாஜிங்டோவில் ஒரு காவல் நி ையம் உள்ளது. ஒரு காவலாளி வெளியே நின்று கொண்டிருந்தான் நாங்கள் அதை மேலிருந்து பார்த்தோம். நாங்கள் காவலாளியைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கடல் முனைவரை எங்கும் நெல்வயல் கள் பரந்து கிடக்கின்றன. உள்ளே சுமார் அரை மைல் தூரம் தள்ளி இருந்த முதல் காவல் நிலையத் திற்குள் நாங்கள் சென்ருேம்." "அவர்கள் எத்தனை பேர்?” "துப்பாக்கியோடு நான்கு பேர்கள்!” அவர்கள் மிகவும் சலிப்படைந்தவர்கள்போல் காணப்பட்டார்கள். துப்பாக்கிகளைப் பக்கத்தில் வைத்துவிட்டு இருவரும் பேசாமல் தரையில் அமர்ந் திருந்தனர். 'அவர்களிடம் நீங்கள் பேசினரீர்களா?” 'இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் பேச வில்லை. அவர்களில் ஒருவன் எங்களைப் பார்த்து எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டான். நான் வீவானில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு என்று சொன்னேன். இதைக் கேட்பதில்கூட அக்கறையுள் வர்களாக்த் தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/474&oldid=1275111" இலிருந்து மீள்விக்கப்பட்டது