உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


ளிடம் சிறிதளவு கூக்சம் இருந்தது. அவள் நடப்புக் களை அடிக்கடி மறந்தாள்: மற்றவர்களை அதிகமாக மன்னிக்கும் மனச்சார்புடையவளாகவும் இருந்தாள்' அவளுக்குத் தலைமைத் தாதிப் பதவி அளிக்க ஆஸ் பத்திரி முன் வந்தது; அவள் மறுத்துவிட்டாள். சுயேச்சையாக இருந்து கடமை செய்வதில் அவள் திருப்தியடைந்தாள். சட்டதிட்டங்களையெல்லாம் அவள் நினைவிற் கொள்வதில்லை. ஜன்னல் புறத்தினின்றும் அவர்கள் நடந்தார் கள். அத்தையின் தோள்களைப் பற்றியவனுக மேஜையை நோக்கி அவளை அழைத்துச் சென்ருன் ஜேம்ஸ். பிரயாணத்தின் போது ரெயிலில் ஜன்னல் ஒரத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் முகம் ரோஜா வண்ணத்தில் சிவந்திருந்தது. 'அத்தை, ஈஸ்தரைப் பற்றி-இதாவது, ஈஸு வைப்பற்றி விவரமாக எனக்குச் சொல்லுங்கள். அவள் எப்படி இருக்கிருள்? ஸ்டேஷனுக்கு வந்து அவள் என்னை ஏன் சந்திக்கவில்லை?” ஈஸ் என்பது ஈஸ்தர் என்னும் சீன மொழியின் மொழி பெயர்ப்புச் சுருக்கம்; கிறிஸ்தவ வேதச் சார்புகொண்ட பெயர்: கத்தோலிக்க மதப்பிரசார சபையைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தில் சூட்டப் பட்டது. - - 'ஜேம்ஸ், விவேகத்துடன் நடந்துகொள். இது கம்யூனிஸ்ட் சீன அவள் ஏகாதிபத்தியக் கொள்கை யுடைய உன்னுடன் குலவி உனக்கு முத்தமிடுவது தெரிந்தால், அது அவளுக்கு நன்மை பயக்காது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/48&oldid=1274825" இலிருந்து மீள்விக்கப்பட்டது