பக்கம்:இலட்சிய பூமி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

481


“பெண்கள் குழந்தைகளைப் பற்றி என்ன?” என்று கேட்டான் ஜேம்ஸ். "அவர்களை மூன்று சிறு கும்பல்களாகப் பிரித்து விடுவோம்," என்று ஹவாங் விளக்கினன். “மாவோ பெங் அவர்களுடன் இருப்பார். சூவும் நானும் மற்றவர்களை வழி நடத்திச் செல்வோம். நாம் ஒரு வருக் கொருவர் ஐம்பது கஜ தூரத்தில் விரவிக் கிடக்க வேண்டிவரும்; ஆனல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்; உங்கள் கோஷ்டியினர் சண்டை முடியும் வரை மறைந்தே இருக்க வேண்டிவரும். இதற்காக நான் அஞ்சு கிறேன், துப்பாக்கி சுடுவதில் நீங்கள் கைதேர்ந்த வர்களாயிற்றே!” 'குறி தவருமல் சுடுவதில் மகா நிபுணன் என்று நான் சொல்லிக் கொள்ளமாட்டேன். ஆனால், ஐம்பது அல்லது அறுபது கஜ தூரத்திற்குள் உள்ள எதையும் என்னல் கச்சிதமாக அடித்துவிட முடியும். நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பு கிறீர்கள்?’ என்ருன் ஜேம்ஸ். - - 'காவோ துப்பாக்கிப் பிரயோகத்தில் வல்லவன். மற்ற இரண்டு அல்லது மூன்று பேர் ஏற்கெனவேதுப் பாக்கிகளைக் கையாண்டிருக்கிரு.ர்கள். என்னுடைய நண்பர் சூ துப்பாக்கி சுடுவதில் திறமை மிகுந்தவர். எங்களிலே யாரும் மெய்யாகவே வல்லவர்களல்ல சர்ச்லைட் ஒளிவிளக்கைக் குறித்துத்தான் நான் கிலே சப்படுகிறேன். நிலையத்தை நாம் நெருங்குவதற்கு முன்னதாக அதை நாசம் செய்துவிட விரும்புகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/481&oldid=1275117" இலிருந்து மீள்விக்கப்பட்டது