உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482


நான். இரண்டு மனிதத் தலைகளின் அளவுக்கு அது இருக்கிறது. உங்களால் முடியுமா?” 'முடியும்; ஐம்பது அல்லது அறுபது கஜதுாரத் தில் இருந்தால் முடியும்!...” 'நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் அது தான். நாம் அந்த ஒளிவிளக்கை அழித்துவிட்டால், எஞ்சியுள்ளவை மின்மினிப் பூச்சிகளைத் துரத்துவது போன்றவைதான். அதை யார் வேண்டுமென்ருலும் செய்யலாம்.” சூ உங்களோடு வருவார்; நாம் முதல்காரிய மாக காவலரை நிலையத்திலிருந்து ஏமாற்றி வெளிப் படுத்திப் பிடித்து விடுவோம். பிறகு நீங்கள் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் குழப்பிப் பீதி உண்டு பண்ணிவிட்டு திரும்பிவிடுங்கள்!” 'பிறகு, நிச்சயம் நாம் வெற்றி பெற்றுவிட லாம்!” என்று உணர்ச்சிவயப்படாத வகையில் சொன்னன் ஜேம்ஸ்: "நாங்கள் கொஞ்சதுரம் பின்னல் நின்று உங் களே ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருப் போம். அவர்களை ஏமாற்றி சாலைக்கு இழுத்துவர மிகச் சிறந்த ஆட்கள் சிலரை நான் ஏற்பாடு செய்கிறேன். திருப்திகரமாக யிருக்கிறதல்லவா?" அவன் தன் கையைக் கொடுத்தான். ஜேம்ஸ் அவனுடன் கைகுலுக்கினன்; 'திருப்தி யளிக்கச் கூடியதாகத்தான் இருக்கிறது!’ என்று சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/482&oldid=1275118" இலிருந்து மீள்விக்கப்பட்டது