உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 23 ஜேம்ஸ் தொலை நோக்கியை இரவல் வாங்கிக் கொண்டு தானகவே புறப்பட்டான். காட்டின் பின்புறம் இருந்த தரை மேற்குத் திசையில் பத்து கஜத்துக்கு அப்பால் சற்றுச் சரிந்திருந்தது; சூரியன் மறையவில்லை. சாலையில் தொலைவில் வந்துகொண் டிருப்பவர்களோ, அல்லது ஒரு மைல் தொலைவி லிருந்த மரங்களுக்கிடையில் நின்று உளவு பார்ப்ப வர்களோ அவனைக் கண்டுக்கொள்ளமுடியும். அவன் பக்கவாட்டில் வலப்புறமாக நடந்து சென்று, ஒரு மரத்தடியில் மறைவிடம் தேடினன். தன்னுடைய குல்லாயை ஒரு புறமாகச் சிறிது சாய்த்தபடி, தொலை நோக்கியின் மூலம் கூர்ந்து கவனித்தான் அவன். இரு குன்றுகளுக்கும் இடையில் இருந்த சரிவில் தாவர வகைகள் மண்டிக் கிடந்தன. மலைகளுக் கிடையே இருந்த பள்ளத்தின் அமைப்புக் கோட்டை அவன் தொடர்ந்து சென்றபோது எங்கே சண்டை நிகழலாம் என்று கருதினர்களோ அந்த குத்துப் பள்ளத்தின் உருத் தோற்றத்தை மனக்கண் கொண்டு நோக்கினன். மேற்கில், சிவப்புப் புள்ளிகளோடு கூடிய குன்றுகள் இருண்ட பச்சை நிறத்தோடும் பழுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/483&oldid=753080" இலிருந்து மீள்விக்கப்பட்டது