பக்கம்:இலட்சிய பூமி.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484


நிறத்தோடும் குவிந்திருந்தன; மிகத் தாழ்ந்திருந்த இரண்டு சிகரங்கள் ஒரு பெண்ணின் மார்பகத்தைப் போன்று புடைத்திருந்தன. குழுவினரை நோக்கி அவன் திரும்பவும் வந் தான்; அவர்களைத் தாண்டிச் சென்ருன்; காட்டைச் சுற்றிவந்தான்; பிறகு தெற்கு நோக்கி நடந்து சென்ருன், கோலநட்டின் தென்பகுதியும் வடபகு தியைப்போவவே மரங்கள் சூழ்ந்து செங்குத்தாக இருந்தது. இடதுபுறம் கடல் இருந்தது; கடற்கரை யில் மீன் பிடிக்கும் படகுகள் வரிசையாக இருந்தன, கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அவன் காலடி யில் தரை மேடிட்டிருந்தது. முன்புறத்தில் செங்குத் தாக நீட்டிக்கொண்டிருந்த பாறையின் பகுதியால் ஜிங்கெளசுன் நிலையம் பார்வையினின்றும் மறைந் திருந்தது. அவன் கவிழ்ந்து படுத்து ஊர்ந்து கொண்டே தன் வழியைக் கணித்தபடி வந்தான். அவளுல் நன்ருகப் பார்க்க முடிந்தது; ஆனால் போது மான அளவுக்கு அல்ல. மீண்டும் சிறிது சிறிதாக முன்னுேக்கி நகர்ந்த வண்ணம் தன் குல்லாயைக் கீழே வீசி எறிந்தான்; தன் முழங்கைகளில் சாய்ந்த வாறு தான் பார்க்க வந்திருந்தைக் கவனித்தான் அவன். நதி, இடதுபுறத்தில் நெல்வயல், மரச்சாரத் தின்மீது பொருந்தியிருந்த காவல் நிலையம் ஆகியவை அவன் நன்கு கண்ணுக்குத் தென்பட்டன. சாரத் தின் உச்சியில் உருண்ட வடிவம் கொண்ட ஒரு பொருளைப் பார்த்தான்; அதுதான் ஒளிவிளக்காக (ஸ்ர்ச்லைட்) இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/484&oldid=1275119" இலிருந்து மீள்விக்கப்பட்டது