பக்கம்:இலட்சிய பூமி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485


தனக்கு முன்னல் அருகாமையில் ஊசிஇலை மரங் கள், பைன் மரங்கள் ஆகியவற்றின் உச்சி முனைகளைத் தான் பார்க்க முடிந்தது; ஆனல் இடைவெளிகளின் வழியே நிலையத்துக்குச் செல்லும் பாதையை அவன் சரிபார்த்துக் கொண்டான். ஒற்றர்கள் அறிவித் திருந்ததைப்போலவே முற்றிலும் நேராகச்சென்றது பாதை. பின்னர் பாதை உயர்ந்து வடக்கே சென்று மறைந்தது; அவனுல் தீர்மானிக்க முடிந்தவரை மலைகளுக்கிடையே இருந்த பள்ளத்தாக்கின் தூரப் பகுதியில் சிறிய ஓடைக்கு மேலே வலது பக்கத்தில் காடு முன்னேக்கி நீட்டிக்கொண்டிருந்தது. தான் என்ன செய்ய வேண்டுமென்பதற்குரிய ஒரு தீர்மா னத்தை அவன் உருவாக்கிக் கொண்டான். கோஷ்டியிடம் ஜேம்ஸ் திரும்பி வந்து தான் பார்த்திருந்ததை ஹவாங்கிடமும் சூபாதாவிடமும் அறிவித்தான், ஆட்களின் ஆகாரப் பொருள்களின் விநியோகம்பற்றி விளக்கிய வண்ணம் இப்போது முழுவதும் உலர்ந்திருந்த புல்மீது அவர்கள் உட் கார்ந்துகொண்டிருந்தார்கள். பொழுது பட்டதும் கீழே இறங்கி எல்லேயை நோக்கி விரைய இப்போது அவர்கள் காத்துக்கிடந் தனர். அனேகமாக எல்லோர் முகத்திலும் கவலையே தேங்கிக்கிடந்தது. பிங்ஷானைச் சேர்ந்த ஆட்கள் தங்களுடைய சொந்த உணவுப் பங்கீடுகளைக் கொண்டுவந்து சாப் பிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தப் பலவந்தமான முன்னேற்றம் முன் நின்று தாக்குதல் ஆகியவற்ருல் அவர்கள் எல்லையை இருபத்தி நான்கு மணி நேரத் 31 - × -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/485&oldid=1275120" இலிருந்து மீள்விக்கப்பட்டது