உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

487


ஒருமாதிரி கோணிக்கொண்டு தரையில் அமர்ந் தான் ஜேம்ஸ். குழுவினரிடம் தாங்கள் எம்மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்பதுபற்றி ஃபான் சொல்லிக்கொண்டிருந்தான். 'இது எப்படித் தோன்றுகிறது?’ என்று ஈஸ்" வினவினுள். ஜேம்ஸ் கைத்துப்பாக்கி வைக்கும் தோலுறை கொண்ட இடுப்புவாரை சற்றுத் தளர்த்தி விட்டுக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்செறிந்து, "பரவாயில்லை, ஒன்றும் மோசமில்லை. என் இலக்கை நான் கண்டு வைத்திருக்கிறேன்” என்று பதிலிறுத்தான். தன்னு டைய வில்லன் 38 ஸ்பெஷல் துப்பாக்கியை மெது வாகத் தட்டிக்கொடுத்தான். பிரகாசித்துக் கொண்டிருந்த பொருளை நோக் கித் தன் சிறிய கையை நீட்டினன் ஸ்ப்ரெளட். ஆனல் ஈஸ் உடனே 'கையை நீட்டாதே" என்ருள். அவன் கையில் கொஞ்சம் வறுத்த அரிசியைக் கொட்டிக்கொண்டே 'என்ன இலக்கு அது?’ என்று ஈஸ் கேட்டாள். - “என்ன இலக்கென்று கேட்கிருயா? வேருென்று மில்லை. அந்த வி ள க் கு க ள் தா ன்! நாங்கள் நிலையத்தைத் தாக்கத் தொடங்குமுன் அதை உடைத்துவிட வேண்டியது என்னுடையபொறுப்பு!” எப்போதுமே சுத்தமாக இருக்கும் லெய்வா முகம்பார்க்கும் சிறு கைக்கண்ணுடியில் தன் முகப் பூச்சு அலங்காரத்தைப் பூர்த்தி செய்துகொண்டிருந் தாள். அப்போது அனதைச் சிறுவன் க்வென் அவள் மடியில் தன் தலையைப் பதித்தவண்ணம் மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/487&oldid=1275122" இலிருந்து மீள்விக்கப்பட்டது