பக்கம்:இலட்சிய பூமி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488


நோக்கினன். கபில நிற முகமும் கறு விழிகளும் கொண்ட ஷான்டாக் கன்னிப் பெண்களினின்றும் அவள் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருந்தது. 'அசாய் எங்கே?' என்று ஃபான் கேட்டான். "ஆட்களுடன் எங்கேயோ போயிருக்கிருன்." அசாய் எல்லா இடங்களிலும் முன்கூட்டியே சிநேகம் பிடித்து வைத்துக்கொண்டிருந்தான். பசியி லுைம் வறுத்த அரிசியில் ஏற்பட்டிருந்த வெறுப்பா லும் அவன் அரிசியைக் கொடுத்துவிட்டு மசாலை போட்டிருந்த ரொட்டியை பண்டமாற்றுச் செய்து கொண்டிருந்தான். அவை ஆறிப்போய் கடினமாக இருந்தன; ஆளுல் அவற்றில் வெங்காயமும் உப்புமோ, அல்லது வெங்காயமும் சர்க்கரையுமோ கலந்த மசாலை அடங்கியிருந்தது. ரொட்டிகள் மிக எளிதாக நொறுங்கின; ஏனென்ருல் அதில் பன்றிக் கொழுப்பு இல்லை. அவன் வாய் வரண்டுவிட்டது; ரொட்டியை விழுங்குமுன் அவனது கன்னங்கள் உப்பின. வேருெருவனது தண்ணிர்ச் சீசாவிலிருந்த தண்ணீரைப்பருக அவன் விழைந்தான். 'வா! வா! தண்ணிர் தருகிறேன்; பூராவையும் நான் குடித்துவிடமாட்டேன்!” அவன் தண்ணிர்க் குப்பியைக் கொடுத்துவிட்டு மீண்டும் அதைத் திரும்பிப்பெற கையை நீட்டினன். "ஹாங்காங்குக்குப் போய் நீ என்ன செய்யப் டோகிருய்?’ என்று கேட்டான் அந்த மனிதன். "பெரியவளுனதும் டாக்ளி ஒட்டுபவகை இருக் கப் போகிறேன் நான். சரி, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/488&oldid=1275123" இலிருந்து மீள்விக்கப்பட்டது