பக்கம்:இலட்சிய பூமி.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

529 ஏறத்தாழ ஒரு லட்சம் அகதிகள் மூன்று வார காலத்திற்குள் தொடர்ந்து வெளியேறினர். உத்தி யோக பூர்வமான புள்ளி விவரப்படி, அந்த மூன்று வாரங்களில் மாத்திரம், அறுபத்து இரண்டாயிரத்து நானுநூறு பேர் கைது செய்யப்பட்டு சைனவுக்கு வேண்டா வெறுப்பாகத் திருப்பியனுப்பப்பட்டனர். பெரும் ஜனத்திரள் வெளியேற்ற காலத்தின் நம்பத் தகாத கதைகளில் ஒன்று இது; ஒரு சீனத்து காவல் படையினன் ஓர் அகதியைக் கைது செய்திருந்தான். ஆனல் அந்த அகதி அவனுடைய சொந்த மகனாகவே இருந்தான். தந்தையின் சிபாரிசின் பேரில் அவன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டான். நான்காவது தடவையாக அசாய் பிடிபட்டான்; இந்தத் தடவை, காவல் படையினருக்கு ஒத்தாசை செய்வது, போலப் பாவனை செய்து கூர்க்கா காவல் படையினர் அகதிகளைக் கைது செய்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான் அவன்.மறுபடியும் அவன் இராணு வத் தலைவன் முன் ஆஜர்ப் படுத்தப்பட்டபோது, இராணுவத் தலைவன் அவனை ஏறிட்டு நோக்கினன். "அடே அசாய், உன்னை என்ன பண்ணுவ தென்றே எனக்குத் தெரியவில்லையே! நீ ஒரு-!” "ஆம், எனக்குத் தெரியும்-உங்கள்-வாழ்க் கையில் நீங்கள் இதுவரை சந்தித் த. கிரிலே, கொஞ்சமும் திருத்த முடியாத பயல் தானே, காப்டன்?” இராணுவத் தலைவன் தன்னை. மறந்து புன்னகை செய்தான். - முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/528&oldid=753129" இலிருந்து மீள்விக்கப்பட்டது